ராம் சரணின்“பெத்தி” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

ராம் சரணின் ‘பெத்தி’ படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ராம் சரணின்“பெத்தி” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், முதலில் வருகிற மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘பெத்தி’ படத்தின் இயக்குநர் பிறந்தநாளையொட்டி ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com