'ஸ்பிரிட்' படத்தில் திரிப்தி டிம்ரி...பாராட்டிய பிரபல இயக்குனர்

'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை திரிப்தி டிம்ரி நடிக்கிறார்.
சென்னை,
சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்த படமான 'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை திரிப்தி டிம்ரி நடிப்பது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, வளர்ந்து வரும் நட்சத்திரம் திரிப்தி டிம்ரியை படத்தில் சேர்த்ததற்காக சந்தீப் ரெட்டி வங்காவை பாராட்டினார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், "ஹே சந்தீப், 'அனிமல்' படத்தில் திருப்தியின் நடிப்பு அவரை நீங்கள் காட்டிய விதம் இரண்டையும் நினைத்து பார்த்தால், உங்களின் இந்த முடிவு திரிப்தி டிம்ரியை பாலிவுட்டில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் திரிப்தி டிம்ரி, வானளவு உயர வேண்டிய நேரம் இது' என்று தெரிவித்திருக்கிறார்.
Related Tags :
Next Story






