

சென்னை,
‘தர்மன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உண்மையாகும் பட்சத்தில், ராம் பொதினேனி தமிழ் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். ரஜினிகாந்தின் மருமகனாக அவர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.