பிரபலங்களுடன் பிரமாண்டமாக நடைபெற்ற ராம் சரண்-ஜான்வி கபூர் படத்தின் பூஜை

ராம் சரண்-ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ஆர்.சி. 16 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
image courtecy:twitter@TweetRamCharan
image courtecy:twitter@TweetRamCharan
Published on

மும்பை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இன்று இப்படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சியில், ராம் சரண், ஜான்வி கபூர், சிரஞ்சீவி, ராம் சரண் மனைவி உபாசனா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com