"ராமாயணா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'ராமாயணா' படம் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
"ராமாயணா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
Published on

மும்பை,

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 'ராமாயணா'. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.

நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

இப்படத்தின் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், 'ராமாயணா' படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரது காட்சிகளும், பின்னர் ராமர் மற்றும் ராவணன் சண்டையிடும் ஒரு காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும் அனுமனாக நடித்துள்ள சன்னி தியோல் தோன்றும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com