பாக்ஸ் ஆபீஸில் புயலைக் கிளப்பும் 'ராமாயணா'.. 7 நாளில் இத்தனை கோடியா?

‘ராமாயணா’ படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபீஸில் புயலைக் கிளப்பும் 'ராமாயணா'.. 7 நாளில் இத்தனை கோடியா?
Published on: 

சென்னை,

7 நாட்களில் உலகளவில் ரூ.934.55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.611.05 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

7 நாட்களில் ரூ.934.55 கோடி வசூல்

இந்த நிலையில், படத்தின் 7 நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 7 நாட்களில் உலகளவில் ரூ.934.55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.611.05 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 'ராமாயணா' படத்தின் வசூல் மேலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X