

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல்5 நாள்கள் வசூல் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படம் கடந்த 6ம் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ‘ராமாயணா’ படம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தில் ராவணன் சீதையான சாய் பல்லவியைக் கடத்திக்கொண்டு போவதுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ‘ராமாயணா’ படம் 5 நாள்களில் உலகளவில் ரூ. 663 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கான விமர்சனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த திரைப்படம் ஒரு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 1 லட்சம் டிக்கெட்கள் ஆன்லைன் வாயிலாக விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதனால், ‘ராமாயணா’ திரைப்படத்தின் வசூல் இந்த வார இறுதிக்குள் ரூ. 1000 கோடியைத் தாண்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.