

சென்னை,
இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவித்துள்ளது. அதன்படி,முதல்பாகம் நவம்பர் 5 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளது.
வால்மீகி எழுதிய ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் ‘ராமாயணா’ படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த படத்தில் ராவணனாக உருவெடுத்துள்ள யாஷின் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதே போல், ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, தசரதராக நடிக்கும் அருண் கோவில் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. முதல் போஸ்டரில் ராமர் வனவாசம் செல்வதற்கு முன்பு தனது தந்தை தசரதரிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சியும், அடுத்த போஸ்டரில் மறைந்த தனது தந்தை தசரதரின் அஸ்தியை ராமர் ஆற்றில் கரைக்கும் காட்சியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவித்துள்ளது. அதன்படி,முதல்பாகம் நவம்பர் 5 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளது. அந்த பதிவில், "நவராத்திரியின் நன்னாளில், ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் கொண்டாடுகிறோம். இது 'ராமர் யுகத்தின்' தொடக்கம். நமித் மல்ஹோத்ராவின் 'ராமாயணம் பாகம் 1': நவம்பர் 5 முதல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து உயர்தரத் திரையரங்கு வடிவங்களிலும் (premium formats) வெளியாகிறது. விஜயதசமி அன்று முன்பதிவு தொடங்குகிறது." என்று அறிவித்துள்ளனர்.