ஜப்பான், சீனா, ரஷ்யாவில் விரைவில் வெளியாகும் ‘ராமாயணா’ திரைப்படம்

சீன அரசிடம் தணிக்கை கோரி ஏற்கனவே படக்குழு விண்ணப்பித்துள்ளது.
ஜப்பான், சீனா, ரஷ்யாவில் விரைவில் வெளியாகும் ‘ராமாயணா’ திரைப்படம்
Published on: 

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே, ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் ராமாயணா. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.5ம் தேதி இந்தியாவில் வெளியானது. வால்மீகியின் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், இந்தியாவில் ரூ.1,000 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.

ஜப்பான், சீனா, ரஷ்யாவில் ‘ராமாயணா’

பெரும் வரவேற்பை பெற்று வரும் 'ராமாயணா' திரைப்படம், அடுத்தாண்டு காலாண்டிற்குள் சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசிடம் தணிக்கை கோரி ஏற்கனவே படக்குழு விண்ணப்பம் சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நல்ல வரவேற்பு

இப்படம் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் சீன துணைத் தலைப்புகளுடன் வெளியான நிலையில், உலகம் முழுவதும் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெளியான அன்றே இங்கிலாந்து, வட அமெரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடர்ந்து வருகிற 19-ந்தேதி இந்திரைப்படம் பிரேசில், இத்தாலி, உக்ரைன் மற்றும் ஹங்கேரியில் வெளியிடப்பட உள்ளது. நவம்பர் 20 அன்று போலந்திலும், நவம்பர் 26 அன்று அர்ஜென்டினா, மத்திய அமெரிக்கா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் செக்கியாவிலும் வெளியாகிறது.

X