சாய்பல்லவி, யாஷ் நடிக்க 3 பாகங்களாக வரும் ராமாயணம் படம்

ராமாயண படம் 3 பாகங்களாக தயாராக உள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடிக்கிறார்கள்.
சாய்பல்லவி, யாஷ் நடிக்க 3 பாகங்களாக வரும் ராமாயணம் படம்
Published on

ராமாயண கதையை மையமாக வைத்து ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வந்துள்ளன.

தமிழ், தெலுங்கில் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் வந்த ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் ராமாயண படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் வந்தனர்.

தற்போது இன்னொரு ராமாயண படம் தயாராக உள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடிக்கிறார்கள். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளோடு அதிக பொருட்செலவில் தயாராகிறது. இந்த படத்தில் ராவணனாக யாஷ் நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படம் 3 பாகங்களாக தயாராகிறது. முதல் பாகத்தில் ராமர், சீதை சம்பந்தமான காட்சிகளையும், இரண்டாவது பாகத்தில் சீதை இலங்கைக்கு கடத்தப்படுவது மற்றும் ராமர், ராவண யுத்த காட்சிகளையும், மூன்றாவது பாகத்தில் லவகுசா பிறப்பு என்று ராமாயணத்தின் மொத்த கதையையும் காட்ட இருக்கிறார்கள்.

அல்லு அரவிந்த், மது மந்தெனா அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். நிதிஷ் திவாரி டைரக்டு செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com