''கில்'' ரீமேக் வரும்...ஆனால் அதில் துருவ் விக்ரம் இல்லை - இயக்குனர் ரமேஷ் வர்மா


Ramesh Varma confirms Dhruv Vikram film is not Kill remake
x

''கில்'' ரீமேக்கில் நடிக்க பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இயக்குனர் கூறினார்.

சென்னை,

மாரி செல்வராஜின் ''பைசன்'' படத்தில் நடித்திருக்கும் துருவ் விக்ரம், அடுத்ததாக ரவி தேஜாவின் வீரா, கிலாடி மற்றும் தமிழில் வெற்றி பெற்ற 'ராட்சசன்' படத்தை 'ராட்சசுடு' என்ற பெயரில் ரீமேக் செய்து பெயர் பெற்ற ரமேஷ் வர்மாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இது சூப்பர்ஹிட் பாலிவுட் ஆக்சன் படமான கில் (2024) படத்தின் ரீமேக் என்று இணையத்தில் செய்திகள் பரவியநிலையில், ரமேஷ் அதனை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "நான் துருவுடன் ''கில்'' படத்தின் ரீமேக்கில் பணியாற்றவில்லை. ஆனால், அவருடன் அடுத்த ஆண்டு வேறொரு படத்தை தொடங்குவேன். அது ஒரு காதல் கதையாக இருக்கும்" என்றார்

இருப்பினும், கில் ரீமேக் எடுக்கும் திட்டம் உள்ளதாகவும் , அதில் வேறு ஒரு நடிகர் நடிப்பார் எனவும் கூறினார். அதற்காக, பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

1 More update

Next Story