மன்னிப்பு கேட்ட ராணா...!

துல்கர் சல்மான், சோனம் கபூர் ஆகியோரிடம் ராணா மன்னிப்பு கேட்டுள்ளார்
மன்னிப்பு கேட்ட ராணா...!
Published on

தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா, காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராணா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார்.

ராணா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நடிகர் துல்கர் சல்மானுக்கு பொறுமை அதிகம். மும்பையில் அவரது படப்பிடிப்பை பார்க்க சென்றபோது கதாநாயகி தனது கணவருடன் லண்டன் ஷாப்பிங் பற்றி நீண்ட நேரம் பேசி நேரத்தை வீணாக்கினார்.

துல்கர் சல்மான் வெயிலில் பொறுமையாக காத்து நின்றார். அதை பார்த்து எனக்கு கோபம் வந்தது. கையில் இருந்த வாட்டர் பாட்டிலை தூக்கி வீசி அடித்தேன்'' என்றார்.

ரசிகர்கள் பலரும் சோனம் கபூரைத்தான் ராணா குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார் என்று அறிந்தனர். சோனம் கபூரை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்தனர். இது பரபரப்பானது.

இதையடுத்து துல்கர் சல்மான், சோனம் கபூர் ஆகியோரிடம் ராணா மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பேச்சை பலர் தவறாக புரிந்து கொண்டது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. சோனம் கபூர் மீது மதிப்பு உண்டு. எனது பேச்சினால் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com