பாலிவுட் குறித்த ஏ.ஆர். ரகுமான் கருத்துக்கு ராணி முகர்ஜி எதிர்ப்பு

பாலிவுட் முன்னணி நடிகை ராணி முகர்ஜி, ஏ.ஆர். ரகுமானின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் குறித்த ஏ.ஆர். ரகுமான் கருத்துக்கு ராணி முகர்ஜி எதிர்ப்பு
Published on

‘சாவா’ படம் பிரிவினை பேசும் படமாக இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறியதால் கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு படவாய்ப்புகள் குறைந்துவிட்டதாக அவர் கூறியதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், பாலிவுட் முன்னணி நடிகை ராணி முகர்ஜி, ஏ.ஆர். ரகுமானின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “பாலிவுட் சினிமா என்பது மதசார்பற்ற இடம். இங்கு சாதி அல்லது மத அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை. 30 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பினும், அப்படிப்பட்ட அனுபவம் எதையும் நான் கண்டதில்லை.

பாலிவுட்டில் தகுதிக்குத்தான் மதிப்பு. ஒருவரின் வேலை அவர்களுக்காகவே பேசும். திறமையுள்ளவர்கள் இங்கே நிலைத்து வெற்றி பெறுகிறார்கள். எனவே பாலிவுட் குறித்து தேவையற்ற மற்றும் தவறான கருத்துகளை பரப்புவது சரியல்ல,” என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com