பத்மாவத் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது

பத்மாவத் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரன்வீர் சிங் 'தாதா சாகிப் பால்கே' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Padmaavat
பத்மாவத் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது
Published on

புதுடெல்லி,

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சித்தூர் ராணி பத்மினியின் கதை 'பத்மாவத்' என்ற பெயரில் தீபிகா படுகோனே - ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. பத்மாவத் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாரட்டை பெற்ற ரன்வீர் சிங் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு ஆகியுள்ளார்.

இதுதொடர்பாக, தாதா சாகேப் பால்கே விருது கமிட்டி அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பத்மாவத் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நீங்கள் 2018-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com