ரன்வீர் சிங்கின் “துரந்தர் 2” பட டிரெய்லர் நாளை வெளியீடு

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2’ படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
ரன்வீர் சிங்கின் “துரந்தர் 2” பட டிரெய்லர் நாளை வெளியீடு
Published on

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் கதாபாத்திரம், அதில் வில்லனாக நடித்த அக்‌ஷய் கண்ணாவுக்கும் சமூக வலைதளத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், ரவி ராம்பால் ‘துரந்தர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 34 நிமிஷம் கொண்டதாக உருவாகியிருந்தது. ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகம் 4 மணி நேரம் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2’ படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com