ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகளவில் முதலிடம் பிடித்து இமாலய சாதனை!

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள 22-க்கும் மேற்பட்ட நாடுகளின் நெட்பிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் இப்படம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகளவில் முதலிடம் பிடித்தது.
கோப்புப்படம்
Published on

மும்பை,

ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகளவில் முதலிடம் பிடித்து இமாலய சாதனை படைத்தது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் உலகளவில் முதலிடம்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி - ஜூன்) உலகளவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இந்தத் தகவலை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டெட் சரண்டோஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

சாதனையின் முக்கியப் புள்ளிகள்

ஓடிடி தளத்தில் வெளியான சில மாதங்களிலேயே இப்படம் 37 மில்லியன் (3.7 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள 22-க்கும் மேற்பட்ட நாடுகளின் நெட்பிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் இப்படம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பின்னணியில், கராச்சி நகரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அதிரடி உளவுத் திரைப்படமான இதற்கு உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியத் திரைப்படம் ஒன்று சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி தளத்தில் இத்தகைய பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் பெருமிதம் அடையச் செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com