ரன்வீர் சிங்கின் 'துரந்தர் தி ரிவெஞ்ச்' : முன்பதிவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
சென்னை,
ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. முன்னதாக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தை இயக்குனர் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.
இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர், வெளியான 48 மணி நேரத்திற்குள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
இதுமட்டுமின்றி, ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் முன்பதிவிலும் புதிய வரலாறு படைத்து வருகிறது. அதாவது, படம் வெளியாகும் முன்பே ரூ.120 கோடி வசூலை முன்பதிவாக பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தலா ரூ.60 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், படம் வெளியாகிய பிறகு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

