'தக் லைப்' படத்தில் பாடிய ராப் பாடகர் பால் டப்பா!


தக் லைப் படத்தில் பாடிய ராப் பாடகர் பால் டப்பா!
x

கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி நெறுங்கி வருவதால் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாய் ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பெர்பாமென்ஸ் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தக் லைப் படத்திலிருந்து புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தக் லைப் படத்தில் இடம் பெற்றுள்ள 'ஓ மாரா' என்ற பாடலை பிரபல ராப் பாடகர் பால் டப்பா பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story