விஜய் மில்டன் இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகும் வேடன்


Rapper Vedan makes Tamil debut in Vijay Miltons film
x

'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் வேடன்.

சென்னை,

விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் ராப் பாடகர் வேடன் இணைந்திருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

'கோலி சோடா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் விஜய் மில்டன், புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் மூலம் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் வேடன். சமீபத்தில் டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலை வேடன் எழுதி பாடியிருந்தார்.

1 More update

Next Story