பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனமாடிய ராஷ்மிகா

‘மைசா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா இதுவரை நடித்திராத மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனமாடிய ராஷ்மிகா
Published on

ஐதராபாத்,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா 'மைசா' என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.

'மைசா' படத்தை ரவீந்திரபுள்ளே இயக்குகிறார். படத்தின் ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அஜய் அன்ட் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா இதுவரை நடித்திராத மாறுபட்ட தேற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற ராஷ்மிகா பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனமாடினார். கோண்ட் பழங்குடியினரின் கலாசார பின்னணியில் ஆழமான கதையுடன் உணர்வு பூர்வமாகவும் அதிரடி திரில்லராகவும் மைசா படம் உருவாக இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com