முதல் முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா

பிரசாந்த் நீல் இயக்கி வரும் 'டிராகன்' படத்தில் ராஷ்மிகா மந்தனா நடனமாட உள்ளார்.
முதல் முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்","டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் 'சிக்கந்தர்' படம் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பான் இந்தியா அளவில் ராஷ்மிகா மந்தனா பிரபலமாகியுள்ளார்.

இந்த நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்து வரும் படம் 'டிராகன்' படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஒரு சிறப்பு பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனமாடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக படக்குழு அவருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ராஷ்மிகா மந்தனா இதுவரை எந்த படத்திலும் குத்து பாடலுக்கு நடனமாடியதில்லை என்பதாலும், அவரது பான் இந்தியா புகழ் காரணமாக இந்தப் பாடல் வெற்றி பெறும் என்பதாலும் பிரசாந்த் நீல் அவரை அணுகியதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com