ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள்; சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'புஷ்பா-2' படக்குழு

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.
ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள்; சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'புஷ்பா-2' படக்குழு
Published on

சென்னை,

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. வசீகரமான முக அழகு கொண்ட அவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகுக்கு சென்று ராஷ்மிகா நடித்த அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடத்தில் மேலும் பிரபலமாக்கியது.

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் இந்திய அளவில் ராஷ்மிகாவை கொண்டு சேர்த்தது. 2021-ம் ஆண்டு கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ராஷ்மிகா. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்தார்.

மேலும் புஷ்பா, ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு, சீதா ராமம், குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். தொடர்ந்து புஷ்பா - 2, ரெயின்போ, தி கேர்ள் ப்ரண்ட், சாவா என படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு புஷ்பா - 2 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com