'புஷ்பா' இயக்குனருடன் மீண்டும் இணையும் ராஷ்மிகா மந்தனா?

ராம் சரணின் 17-வது படத்தை சுகுமார் இயக்க உள்ளதாக தெரிகிறது.
Rashmika Mandana to team up with 'Pushpa' director again?
Published on

மும்பை,

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் வசூல் சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இப்படம் இதுவரை இது ரூ. 1,871 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாறு படைத்திருக்கிறது.

இதுமட்டுமில்லாமல், ராஷ்மிகா நடிப்பில் கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான சாவா படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் சுகுமாருடன் மீண்டும் ராஷ்மிகா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ராம் சரணின் 17-வது படத்தை சுகுமார் இயக்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com