'தி கேர்ள் பிரண்ட்' பட ரிலீஸ் அப்டேட் கொடுத்த ராஷ்மிகா


Rashmika Mandanna drop new update on The Girlfriend’s release
x
தினத்தந்தி 19 May 2025 11:46 AM IST (Updated: 3 Oct 2025 8:25 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் ரிலீஸ் குறித்து ராஷ்மிகா அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தற்போது 'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து ராஷ்மிகா அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, பட பணிகளை துரிதப்படுத்தி விரைவில் வெளியிடுவோம் என்று கூறி இருக்கிறார்.

மறுபுறம், ராஷ்மிகா பாலிவுட்டில் 'தாமா' என்ற ஹாரர் படத்திலும், தனுஷுடன் 'குபேரா' படத்திலும் நடிக்கிறார். 'குபேரா' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

1 More update

Next Story