'புஷ்பா 2' படத்தின் டப்பிங் பணியில் ராஷ்மிகா மந்தனா


புஷ்பா 2 படத்தின் டப்பிங் பணியில் ராஷ்மிகா மந்தனா
x

'புஷ்பா 2' படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஈடுபட்டுள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றி டிசம்பர் 5-ம் தேதியே உலகளவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 'படத்தின் முதல் பாகத்திற்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டது. இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கிறது' என்று அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story