“மைசா” படத்தின் சண்டைப் பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா “மைசா” படத்திற்காக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
“மைசா” படத்தின் சண்டைப் பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா
Published on

கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதலில் கன்னட படத்தில் அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ரணபலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி சமீபத்தில் இணைந்து நடித்தனர்.

ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’ படத்தில் போர் வீராங்கனை போல அதிராடியான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறது. அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.

‘புஷ்பா 2’ பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேஜிஎப், தேவரா படங்கள் மூலம் கவனிக்கப்பட்ட தாரக் பொன்னப்பா, சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இது ராஷ்மிகாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படமாகும்.

இந்நிலையில், ‘மைசா’ படத்திற்காக, ரஷ்மிகா பேங்காக்கில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com