'புஷ்பா 3' குறித்து அப்டேட் கொடுத்த ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Rashmika Mandanna gives an update on 'Pushpa 3'
Published on

சென்னை,

"நேஷனல் கிரஷ்" என்றழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளியாக ரசிகர்களின் மனதை வென்ற ராஷ்மிகா, 2-ம் பாகத்திலும் ரசிகர்களை கவருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்படி, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது, படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, படத்தின் புரமோஷனுக்காக படக்குழு நேற்று சென்னை வந்தது.

அப்போது பேசிய ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படத்தின் 3-ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'புஷ்பா படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதையோ மிஸ் பண்ணும் உணர்வு எனக்குள் வந்தது. என் வாழ்க்கை புஷ்பா படத்திற்கு சமம். பாகம் 1, பாகம் 2 மற்றும் பாகம் 3' என்றார். இதனையடுத்து, புஷ்பா 3 வருவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய அல்லு அர்ஜுன், 'நிச்சயமாக மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com