போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்குட்பட்ட பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா மந்தனா

இந்த பட்டியலில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்குட்பட்ட பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா மந்தனா
Published on

வாஷிங்டன்,

போர்ப்ஸ் இந்தியா இதழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா (27 வயது) மற்றும் ராதிகா மதன் (28 வயது) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் இசைத் துறையில் அதிதி சைகல் (25 வயது) என்ற பாடகி இடம்பெற்றுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்டியலில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராஷ்மிகா கடந்த ஆண்டு வெளியான வாரிசு, மிஷின் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர், தனுஷின் 51-வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com