என்னை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள் ஆனால்... - ராஷ்மிகா மந்தனா

என்னை விட அழகான மற்றும் திறமையான பெண்கள் இருக்கிறார்கள் என்று ராஷ்மிகா மந்தனா கூறினார்.
image courtesy:instagram@rashmika_mandanna
image courtesy:instagram@rashmika_mandanna
Published on

சென்னை,

இந்திய அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெருகின்றன. சமீபத்தில் இவர் நடித்த சீதா ராமம், அனிமல் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில்,

"என்னை விட அழகான மற்றும் திறமையான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருக்கிறேன். வாழ்க்கையில் மகிழ்ச்சி அல்லது நீங்கள் அடையும் வெற்றியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கடந்த சில ஆண்டுகளாக இதை நான் கற்றுக்கொண்டேன்." இவ்வாறு கூறினார்.

தற்போது ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com