முன்னாள் காதலர்கள் பற்றி ராஷ்மிகா விளக்கம்

முன்னாள் காதலர்கள் பற்றி ராஷ்மிகா வெளிப்படையாக பேசி உள்ளார்.
முன்னாள் காதலர்கள் பற்றி ராஷ்மிகா விளக்கம்
Published on

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா இப்போது வாரிசு படத்தில் விஜய் ஜோடியாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தனது முன்னாள் காதலர்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

இதுகுறித்து ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''எனது வாழ்க்கை வெளிப்படையானது. எனது முன்னாள் காதலர்களை இப்போதும் நான் நல்ல நண்பர்களாகவே பார்க்கிறேன். அவர்களின் தற்போதைய மனைவிமார்களை சந்திக்க எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. முன்னாள் காதலர்களுடன் சுமுக நட்பில் இருப்பது நல்ல லட்சணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் யாருக்கும் விரோதியாக இருக்க மாட்டேன். என்னையும் நடிகர் விஜய் தேவரகொண்டாவையும் இணைத்து பேசுவதை மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com