தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி படங்கள்...வரலாறு படைத்த ராஷ்மிகா மந்தனா


Rashmika Mandanna scores three 500-Cr hits in Hindi
x

"சாவா" மூலம் வரலாறு படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

சென்னை,

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கடைசியாக கடந்த 14-ம் தேதி ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் சாவா. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், "சாவா" படம் ரூ. 500 கோடி வசூலை எட்டியுள்ளது. இதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

அதன்படி, இந்தியாவில் இந்தியில் தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த ஒரே நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா பெற்றுள்ளார். இதற்கு முன்பு இவர் நடித்த 'புஷ்பா 2" இந்தி பதிப்பில் ரூ.800 கோடியும் 'அனிமல்" இந்தி பதிப்பில் ரூ. 555 கோடியும் வசூலித்திருந்தது.

1 More update

Next Story