சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

டான் பட இயக்குனர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?
Published on

டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத நிலையில் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுகன் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com