“ரணபாலி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.
 “ரணபாலி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on

ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி' பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர்.இதில் 'மம்மி' பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், ‘ரணபாலி’ திரைப்படத்தின் “ஏதய்யா சாமி" பாடல் வெளியானது. இப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com