என் மீது வெறுப்பு காட்டுவதா? நடிகை ராஷ்மிகா வருத்தம்

எனக்கு எதிராக வெறுப்பு கருத்துகள் பரப்புகின்றனர் என்று நடிகை ராஷ்மிகா கூறினார்.
என் மீது வெறுப்பு காட்டுவதா? நடிகை ராஷ்மிகா வருத்தம்
Published on

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீப காலமாக ராஷ்மிகா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதுகுறித்து ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு எதிராக வெறுப்பு கருத்துகள் பரப்புகின்றனர். அது ஏன் என்று புரியவில்லை. அதிக உடற்பயிற்சி செய்தால் பையன் மாதிரி இருப்பதாக சொல்கிறார்கள். உடற்பயிற்சி செய்யாவிட்டால் குண்டாக இருக்கிறேன் என்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள்.

நான் என்னதான் செய்வது? சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்னிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்கள் வார்த்தைகள் மன ரீதியாக என்னை புண்படுத்துகின்றன. இந்தி பாடலை உயர்வாகவும் தென் இந்திய பாடல்களை அவமதிக்கும் வகையிலும் நான் பேசியதாக கூறினர்.

அப்படி நான் பேசவே இல்லை. வாரிசு படத்தில் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று பேசுகிறார்கள். வாரிசு படத்தில் ஒரு அங்கமாக இருக்க விரும்பினேன். காரணம் எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com