

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு கடந்த 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. உதய்பூர் அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 4ஆம் தேதி பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா ஜோடி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து, ராஷ்மிகா தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு குறித்து ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பதிவில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். “தெலுங்கானாவின் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, கீதா மற்றும் நிமிஷா அவர்களை சந்தித்தேன். உங்களுடன் நேரத்தை செலவிடுவதும், அந்த அற்புதமான இனிமையான உரையாடல்களை அனுபவிப்பதும் மிகவும் அருமையாக இருந்தது. அழகான பரிசுக்கும் நன்றி. ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.