"குபேரா" படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா

குபேரா, ராஷ்மிகா நடித்துள்ள 'குபேரா' படம் முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் 51-வது திரைப்படமான 'குபேரா' படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகியிருக்கிறது. இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றோர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா 'குபேரா' படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






