ராஷ்மிகாவின் ‘தி கேர்ள் பிரண்ட்’ பட டிரெய்லர் வெளியானது


Rashmikas girl friend trailer out now
x
தினத்தந்தி 25 Oct 2025 1:31 PM IST (Updated: 30 Oct 2025 10:53 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற நவம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற பெயரில் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் வருகிற நவம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story