ராஷ்மிகாவின் "மைசா" படப்பிடிப்பு பூஜை


ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜை
x
தினத்தந்தி 27 July 2025 9:02 PM IST (Updated: 30 July 2025 10:33 AM IST)
t-max-icont-min-icon

ராஷ்மிகா நடிக்கும் 'மைசா' படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

ஐதராபாத்,

தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்தபடியாக 'மைசா' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. அதில் ஒரு மிரட்டலான தோற்றத்தில் காணப்பட்டார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் 'மைசா' படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது, தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, ராஷ்மிகாவின் முதல் ஷாட்டுக்கு கிளாப் போடு அடித்து தொடங்கி வைத்திருக்கிறார். இதுவரை ராஷ்மிகா நடித்திராத ஒரு அதிரடியான வேடத்தில் இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதால் இந்த 'மைசா' படத்திற்காக எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து இருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகாவுடன் நடிக்கக்கூடிய மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story