ராஷ்மிகாவின் “தம்மா” படத்தின் முதல் பாடலின் டீசர் வெளியீடு

ராஷ்மிகா, ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ‘தம்மா’ படம் அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது
ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ‘தம்மா ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடிக்கிறனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது.. தற்போது ரிலீஸ் நெருங்கி வரும்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ‘தம்மா ’ படத்தின் முதல் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை ராஷ்மிகா கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
Related Tags :
Next Story






