ராஷ்மிகாவின் "தி கேர்ள் பிரண்ட்" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

'தி கேர்ள் பிரண்ட்' படம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகாவின் "தி கேர்ள் பிரண்ட்" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா 'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் மாதம் 7ந் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com