தயாரிப்பாளர் மீது நடிகை ரத்தன் ராஜ்புத் பாலியல் புகார்

சினிமாவில் படவாய்ப்புக்காக தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்து உள்ளார் நடிகை ரத்தன் ராஜ்புத்.
தயாரிப்பாளர் மீது நடிகை ரத்தன் ராஜ்புத் பாலியல் புகார்
Published on

பிரபல இந்தி நடிகை ரத்தன் ராஜ்புத். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். அக்லே ஜனம் மோஹே பிடியா ஹே கிஜோ என்ற தொடர் ரத்தன் ராஜ்புத்துக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில் சினிமாவில் படவாய்ப்புக்காக தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்து உள்ளார்

இதுகுறித்து ரத்தன் ராஜ்புத் அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமாவில் நடிக்க மும்பைக்கு வந்த புதிதில் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். 60 வயதுள்ள தயாரிப்பாளர் ஒருவரை அணுகி வாய்ப்பு கேட்டேன். அவர் நண்பர்களாக இருக்கலாம் என்று சொல்லி என்னிடம் தவறாக அணுகினார். எதையும் இலவசமாக செய்ய மாட்டேன் என்றும் கூறினார். அவரிடம் உங்களுக்கு எனது தந்தை வயதாகிறது என்று சொல்லி மறுத்து விட்டேன். நடிக்க யார் வாய்ப்பு கேட்டாலும் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்றார். இப்போது அவரை சந்திக்க நேர்ந்தால் செருப்பால் அடிப்பேன்" என்று கூறினார். இது பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com