நான் விஜய்யின் ரசிகன் என்பதை விட அவரது வெறியன் என்று சொல்லலாம்- சாய் அபயங்கர்

அவருக்காக மாஸான ஹிட் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நான் விஜய்யின் ரசிகன் என்பதை விட அவரது வெறியன் என்று சொல்லலாம்- சாய் அபயங்கர்
Published on

சென்னை,

சாய் அபயங்கர், "கட்சி சேரா", "ஆச கூட" போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய இசையமைப்பில் முதல் படமாக 'டியூட்' வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 'கருப்பு', 'மார்ஷல்', 'அட்லி இயக்கி வரும் ராக்கா படம்', விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.தமிழ் திரையுலகில் புதுமையான இசை மொழியால் வேகமாக உயர்ந்து வரும் இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சாய் அபயங்கர்.

இந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சாய் அபயங்கர், அவர் விஜய்யின் வெறியன் என்ற தெரிவித்துள்ளார். அதாவது, "நான் விஜயின் ரசிகன் என்பதை விட அவரது வெறியன் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்காக மாஸான ஹிட் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். குறிப்பாக அவர் நடித்த சச்சின் மாதிரியான படங்களுக்கு இசையமைக்க விரும்பினேன். ஆனால் அவர் சினிமாவில் இருந்து விலகி விட்டதால் என்னுடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது" என்று பேட்டியில் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com