'ரத்னம்' படம்: எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களின் நிலை? - நடிகர் விஷால் ஆதங்கம்

நடிகர் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் நாளை (26-ந் தேதி) தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
'ரத்னம்' படம்: எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களின் நிலை? - நடிகர் விஷால் ஆதங்கம்
Published on

சென்னை,

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார். இப்படம் நாளை (26-ந் தேதி) தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ரத்னம் படத்தை திரையிட விடாமல் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் ரத்னம் படத்திற்கான விநியோகத் தொகை பாக்கியைத் தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகும் என திருச்சி தஞ்சாவூர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து தனக்கு ஒரு அறிக்கை வந்திருப்பதாகவும் அந்த தொகையை செலுத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும் விஷால் தெரிவித்துள்ளார்

இது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு சமமான வேலை என்று தெரிவித்துள்ள விஷால், தனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடி இருக்கும் என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com