'ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்

உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு.
ratsasan film producer Dilli Babu passed away
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2015-ன் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் டில்லி பாபு தனது 50-வது வயதில் இன்று காலை காலமானார். இவரது இந்த திடீர் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அவரது ரசிகர்கள், நடிகர், நடிகைகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டில்லி பாபுவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com