'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ; இன்று மாலை 5.04-க்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ இன்று மாலை 5.04-க்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ; இன்று மாலை 5.04-க்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
Published on

சென்னை,

சென்னை, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மார்ச் 18 அன்று நடைபெற்றது.

இதையடுத்து வெளியான பத்து தல படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள ராவடி பாடல் வீடியோ இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com