கார்த்திக் ஆர்யன் நடிக்கும் புதிய படத்தில் கே.ஜி.எப் நடிகை? - வெளியான தகவல்

கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 'கேஜிஎப் 2'-ல் நடித்திருந்தார் ரவீனா தாண்டன்.
Raveena Tandon in Karthik Aryan's new film? - Leaked information
Published on

மும்பை,

இந்தி திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரவீனா தாண்டன் தமிழில் அர்ஜுனின் சாது, கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 'கேஜிஎப் 2'-ல் நடித்து கம்பேக் கொடுத்த ரவீனா தாண்டன், தற்போது பாலிவுட்டில் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் அக்சய் குமாருடன் நடிக்கிறார்.

இந்நிலையில், கார்த்திக் ஆர்யன் நடிக்கும் 'பதி பட்னி அவுர் வோ 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவீனா தாண்டனிடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளது. 'பதி பட்னி அவுர் வோ' படத்தின் முதல் பாகத்தில் கார்த்திக் ஆர்யன், பூமி பெட்னேகர் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முடாசர் அஜீஸ் இயக்கிய இப்படம் 2019-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

கார்த்திக் ஆர்யன் கடைசியாக 'புல் பூலையா 3' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com