தினமும் குளிக்க 25 லிட்டர் பால்; படுக்க ரோஜா மெத்தை கேட்ட பிரபல நடிகர் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்

நான் தினமும் 25 லிட்டர் பாலில் குளிப்பேன், ரோஜா மெத்தையில் தூங்குவேன், என தயாரிப்பாளரிடம் கேட்டதற்காக என்னை திரைப்படங்களில் இருந்து ஒதுக்கிவிட்டனர் என ரவி கிஷன் கூறினார்.
தினமும் குளிக்க 25 லிட்டர் பால்; படுக்க ரோஜா மெத்தை கேட்ட பிரபல நடிகர் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்
Published on

மும்பை

பிரபல போஜ்புரி நடிகரும், பா.ஜ.க. எம்பியுமான ரவி கிஷன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இரவு காபி குடிக்க வருமாறு அழைத்து பிரபல நடிகை ஒருவர் டார்ச்சர் செய்ததாக கூறி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரான பிறகு தனக்கு பெருமை ஏற்பட்டதாக ரவி கிஷன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் அனுராக் காஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆப் வசேபூர்' படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது திமிர் காரண்மா அந்த வாய்ப்பை இழந்ததாக கூறினார்.

பேட்டியின் போது, அந்த ப்டத்தின் படத்தின் படப்பிடிப்பின் போது குளிப்பதற்கு பாலும், தூங்குவதற்கு ரோஜா மெத்தையும் கேட்டதாக சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டார்.

பாலில் குளித்து, ரோஜா இதழ்களில் தூங்குவது வழக்கம். நான் என்னை ஒரு பெரிய நட்சத்திரமாக எண்ணிக்கொண்டேன். பாலில் குளித்தால் மக்கள் இதைப் பற்றி பேசுவார்கள் என்று நினைத்தேன்.

தினமும் 25 லிட்டர் பால் தயார் செய்ய முடியாததால் அவர்கள் என்னை கேங்க்ஸ் ஆப் வசீபூரில் சேர்க்கவில்லை. இந்தக் கோரிக்கைகள் ஒன்றுமில்லாமல் திடீரென்று பணமும் புகழும் கிடைத்தால் மனம் தளர்ந்து போகிறது.'

'குறிப்பாக மும்பை போன்ற நகரம் யாரையும் பைத்தியம் பிடிக்க வைக்கும். நான் ஒப்புக்கொள்கிறேன், நான் என் கட்டுப்பாட்டை இழந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாறி, இயல்பு நிலைக்கு வந்தேன் என்று ரவி கிஷன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com