இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி?

இவர் சமீபத்தில் ஜெயம் ரவி என்று இருந்த தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றினார்.
இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி. இவர் சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதோடு, ஜெயம் ரவி என்று இருந்த தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றினார்.

இந்நிலையில், தனது நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்து அதை தானே இயக்கி, நடிக்க போவதாகவும், அந்த படத்தில் அவரது மகன் ஆரவ் ரவியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2018ம் ஆண்டு சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்த டிக் டிக் டிக் படத்தில் அவர் மகன் ஆரவ் ரவியும் நடித்திருந்தார்.

தற்போது தான் இயக்கும் படத்தில் மீண்டும் மகனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார் ரவி மோகன். இந்த படத்திற்கான கதையை அவரது தந்தையான எடிட்டர் மோகன் எழுதியுள்ளாராம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com