மும்முரமாக நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்... ஆளவந்தான் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது..!

வரும் டிசம்பர் 8-ந்தேதி 'ஆளவந்தான்' திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மும்முரமாக நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்... ஆளவந்தான் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது..!
Published on

சென்னை,

கடந்த 2001-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனிடையே, 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் வெளியாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

அதன்படி வரும் டிசம்பர் 8-ந்தேதி இந்த படத்தை .உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆளவந்தான்' பாடலின் லிரிக்கல் வீடியோவை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படத்தின் ரீ-ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com