சினிமாவுக்காக எதையும் செய்ய தயார் - நடிகை பிரிகிடா

சாகும் வரை சினிமாவில் நடிப்பேன் என்று பிரிகிடா தெரிவித்துள்ளார்.
பிரிகிடா
கோப்புப்படம்
Published on

கே.வி.சபரீஷ் தயாரிப்பில் தயால் பத்மநாபன் இயக்கத்தில் வெற்றி, பிரிகிடா, மாறன், சரவணன், லிசி ஆண்டனி நடித்துள்ள 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சென்னையில் நடந்த பட விழாவில் பிரிகிடா பேசுகையில், "நாம் 80, 90 காலகட்டத்தில் பிறந்திருக்கலாமோ... தவறாக இந்த தலைமுறையில் பிறந்துவிட்டோமோ... என்று அடிக்கடி எண்ணுவது உண்டு. ஏனெனில் நான் நடித்த படங்கள் அனைத்தும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் எனது பாட்டியை மனதில் வைத்துதான் நடித்தேன். அந்த கதாபாத்திரம் அப்படி உணர்வுப்பூர்வமானது. என் இதயத்துக்கும் நெருக்கமானது.

என்னை பொறுத்தவரை இந்த சினிமா தான் எனக்கு எல்லாமே. இங்கு சாகும் வரை நான் நடிப்பேன். தொடர்ச்சியாக இந்த சினிமாவுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பேன்", என்றார். வெற்றி பேசுகையில், "தனித்துவமான படங்களில் நடித்து நல்ல பெயர் பெறுவதே தனது இலக்கு" என்று குறிப்பிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com